மாலைத்தீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் நாட்டிற்குள்

கொரோனா தாக்கம் காரணமாக மாலைத்தீவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 291 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள்மாலே நகரில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான U L 102 எனும் விமானமூடாக இன்று முற்பகல் 11. 36 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.அத்துடன் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பி.சி. ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பயணிகள் எவரேனும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டால் குறித்த நபர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதுடன், ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனAdvertisement