பொத்துவில் பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு பிணை

பொத்துவில் பகுதியில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியா சரீரப் பிணையில் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பகுதியில் திருமண வீடொன்றில் நேற்றிரவு 09 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

பொத்துவில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Advertisement