உண்ணா விரதம்

வி.சுகிர்தகுமார்
 

  கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி முருக பக்தர் ஒருவர் நேற்று(09) முதல் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சித்திவிநாயகம் ஜெய்சங்கர் எனும் பக்த அடியவரே பாணமை பிள்ளையார் ஆலயத்தில் உண்ணாவிரத்தை ஆரம்பித்துள்ளார்.

இரண்டாவது நாளாகவும் அவரது உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் நிலையில் நாளை அவரது குழுவினர் உகந்தை நோக்;கி புறப்படுவதுடன் நாளை முதல் உகந்தை முருகன் ஆலயத்தில் போராட்டம் தொடரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் குறித்த உண்ணாவிரதியின் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தில் இருந்து பாதயாத்திரையினை ஆரம்பித்து பாணமையை வந்தடைந்துள்ளனர்.

யாழ் சந்நதியில் வைக்கப்பட்டுள்ள வேலுடன் புறப்பட்ட ஒரேயொரு பாதயாத்திரை குழுவான இவர்கள் உகந்தை மலையினை அடைந்து அங்கு வழிபாடுகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை  திறக்கும்வரை சித்திவிநாயகம் ஜெய்சங்கர் எனும் தமது பாதயாத்திரை குழுவின் தலைவரின் உண்ணாவிரதப்போராட்டம் தொடரும் எனவும் இது தொடர்பில் அரசாங்கம் சிறந்த முடிவொன்றினை எடுக்க வேண்டும் பாதயாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement