உற்பத்தி துவங்கியது

அஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் உற்பத்தி துவங்கியது. புதிய டிபிஎக்ஸ் முதல் மாடல் உற்பத்தி ஆலையில் இருந்து வெளியே எடுத்து வரப்பட்டது. செயின்ட் ஆத்தன் உற்பத்தி ஆலையில் முதலீடு செய்துள்ளதாக நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நிலையில், புதிய கார் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. 

ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ்

புதிய ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. புதிய என்ஜின் 542 பிஹெச்பி பவர், 700 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.3 நொடிகளில் எட்டிவிடும். 

ஆஸ்டன் மார்டின் டிபிஎக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 291 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதுவரை இந்த கார் வாங்க சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து உள்ளனர்.


Advertisement