மட்டக்களப்பில், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து



MSM. Noordeen.
கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னாள் ஊடகவியலாளர்கள் இன்று (11) கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கொழும்பில் நேற்றைய தினம் (10) ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்த்தனவை போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.
இதனை கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் கலந்து ஊடகவியலாளர்கள், கலந்துகொண்டு ஊடக சுதந்திரம் வேண்டும், ஊடகவியலாளரை அச்சுறுதிய பொலிசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஊடகவியலாளரின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். என ஊடகங்களுக்கெதிரான நெருக்குதல்கள் தொர்பிலான கோசங்களை எழுப்பியவாறு சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊடகங்கள் காலங்காலமாக நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான நெருக்கடிகளற்ற ஒரு ஊடகக் கலாசாரம் உலகளவில் அமைந்து விடவேண்டு மென்பதில் ஊடகக்காரர்களும், ஊடகங்களும், பல்வேறு அமைப்புகளும் ஆர்வலர்களும் முயன்று கொண்டிருந்தாலும் அது சாத்தியமற்றதாகவே அமைந்து வருகிறது.
இச் சம்பவம், தற்போதைய நேரத்தில் அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதற்கு அல்லது தவிர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொண்டாக வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.
அந்த வகையில் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாத வண்ணமான ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்குட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் குரல் கொடுப்பதும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காக பாடு படுவதும் ஊடகம் சார் அக்கறையுள்ள ஒவ்வொருவரதும் பணியும் கடமையுமாகும் என்று கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Photos: MSM. Noordeen