யானைத் தாக்குதலில் விரிவுரையாளர் உயிரிழப்பு

கிளிநொச்சி மொழில்நுட்ப பீட விரிவுரையாளர் காயத்திரி டில்றுக்சி ( வயது 32) யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் ஆலய வழிபாட்டிலிருந்து திரும்பும் வேளையில் யானை இவரைத் துரத்தித் தாக்கியுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று அகால மரணமானார். இவர் கொழும்பு களனிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்.


Advertisement