சுமந்திரன் யாழில் வாக்களிக்கும் புத்தளம் வாழ் முஸ்லிம்களைச் சந்தித்தார்


வெறும் தேர்தல் பரப்புரையாக இல்லாது, தேசிய அரசியலில் ஏற்பட்டிருக்கும் கடும்போக்கான மாற்றங்கள் குறித்தும், தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதன் அவசியம் குறித்துமே அவர் இங்கு அதிகம் பேசினார். 

"சிங்கள பௌத்த மேலாண்மை வாதத்தை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கையில் ஆட்சியேற முடியும் என்று  செய்து காட்டிய கட்சியை நாம் தேர்தலில் சந்திக்கிறோம். இவர்கள் தமிழரையும், முஸ்லிம்களையும் ஒரே நேரத்தில் அடிக்கமாட்டார்கள். இது வரலாறு எமக்குச் சொல்லும் செய்தி. ஆனால் தனித்தனியாக தமிழரையும், முஸ்லிம்களையும் அடிப்பார்கள். தமிழரை அடிக்கும் போது முஸ்லிம்களும், முஸ்லிம் மக்களை அடிக்கும் போது தமிழ் மக்களும் மாறி மாறிக் குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். கை கொட்டி வேடிக்கை பார்க்கின் இரு இனங்களுமே பாரிய அழிவுகளைச் சந்திக்கும் காலமாக இது மாறும்." - எனக் குறிப்பிட்டார்.