முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர், சடலமாக

 

முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மஹிந்த விஜேசிறி  அவரது வாகனத்திற்குள்ளிருந்து ஹொரண - ஹஸ்பாவ பிரதான வீதியோரத்தில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். 

 அரை மணி நேரத்திற்கும் மேலாக ஒரு வர்த்தக நிலையத்திற்கு முன்பாக வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் பிலியந்தலை பொலிஸார் பரிசோதனை செய்த போதே அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்..

மூன்று பிள்ளைகளின் தந்தையான மஹிந்த விஜேசிறி கஹதுட்டுவ என்ற இடத்தை வதிவிடமாகக்கொண்டவராவார். 

வாகனம் செலுத்துபவரின் ஆசனத்தில் இருந்தவாறு பக்கத்திலிருந்த பயணிகள் ஆசனத்தில் இறந்த நிலையில் சரிந்து கிடப்பதை தகவலை அடுத்து அங்கு சென்ற பிலியந்தலை பொலிஸார்  அவதானித்தனர்.

தனது மகளின் இல்லத்தில் இருந்து மனைவியை ஏற்றிவருவதற்காக நுகேகொடை செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளதாக ஆரம்ப கட்டவிசாரணைகளில் இருந்து தெரியAdvertisement