#டெலிகிராம் செயலியில் புதிய சேவை

 

வாட்ஸ் ஆப்பிற்கு மாற்று செயலியாக டெலிகிராம் உள்ளது. டெலிகிராம் செயலி  2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

டெலிகிராமை விட வாட்ஸ் ஆப்பைதான் உலகில் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.

எனினும், ரஷிய நாட்டில் உருவாக்கப்பட்ட  செயலியான டெலிகிராமில் வாட்ஸ் ஆப்பைக் காட்டிலும் பல புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது 2 ஜிபி வரையிலான பைல்கள், விடியோக்கள் ஆகியவற்றை பகிரும் வகையில் டெலிகிராம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாட்ஸ்ஆப்பில் 16 எம்பி வரையிலான விடியோக்களும், 100 எம்பி வரையிலான பைல்கள் மட்டுமே பகிர முடியும்.

டெலிகிராம் தொடங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே 1.5 ஜிபி வரையிலான பைல்களை பகிரும் வகையில் மேற்படுத்தப்பட்டது. இது வாட்ஸ் ஆப்பின் 16 ஜிபியைவிட 93 மடங்கு அதிகம்.

மேலும், டெலிகிராம் செயலியில் வாய்ஸ் கால் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. டெலிகிராம் செயலியில் இதுவரை வீடியோ காலிங் வசதி வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், டெலிகிராம் செயலியில் வீடியோ கால் அம்சம் இந்த ஆண்டு வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் டெலிகிராம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள வீடியோ கால் அம்சம் செயலியின் 7.0 வெர்ஷனில் வழங்கப்படலாம்.

டெலிகிராம் வீடியோ கால் இன்டர்பேஸில் பின்புறம் மற்றும் முன்புற கேமராக்களை மாற்ற ஆன் ஸ்கிரீன் பட்டன் வழங்கப்படுகிறது. அத்துடன் வீடியோ டாகிள், மியூட் மற்றும் குளோஸ் செய்யக்கோரும் பட்டன்களும் ஸ்கிரீனில் காணப்படுகிறது.

அரிமுகப்படுத்தப்பட்ட டெலிகிராமின் வீடியோ காலிங் இன்டர்பேஸ் மற்ற செயலிகளில் உள்ளதை போன்றே காட்சியளிப்பதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு செயலியில் இந்த அம்சத்தை இயக்க விரும்பினால், மைக்ரோசாப்ட் ஆப் சென்டர் மூலம் புதிய ஏபிகே வெர்ஷன் டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம். 

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)Advertisement