ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுதியானது


சஜித் பிரேமதாஸவை தலைவராகக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் எவ்வித மாற்றமும் இன்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது

பொதுத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகி சில தினங்களிலே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக தேசியப்பட்டியலுக்கு பிரேரிக்கப்பட்டுள்ளவர்கள் என ஏழுபேரின் பெயர்கள்  சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தன. 

1) ரஞ்சித் மத்துமபண்டார  -ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்

2) ஹரின் பெர்னாண்டோ-தேசிய அமைப்பாளர்

3) இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 

4) திஸ்ஸ அத்தநாயக்க 

5) ஏரான் விக்கிரமரத்ன 

6) மயந்த திஸாநாக்க 

7) டயானா கமகே 

ஆகிய ஏழுபேரின் பெயர்களே வெளியாகியிருந்தன.


இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் 

இருந்தபோதிலும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து போட்டியிட்ட சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளான தமிழ் முற்போக்கு முன்னணி ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தமக்கும் தேசியப்பட்டியலில் ஆசனம் ஒதுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் பேச்சுவார்த்தைகளுக்காக தேசியப்பட்டியல் அறிவிப்பு இடைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

 எமது மக்கள் சக்தி என்ற தேரர்களின் கட்சியைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் தமது தேசியப்பட்டியலை உறுதிசெய்திருந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் இழுபறியில் இருந்தது. 

பலசுற்றுப்பேச்சு பேச்சுவார்த்தைகளையடுத்தும்  முன்னர் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்த அதே பெயர்களே தேசியப்பட்டியலுக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக இறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.