அக்கரைப்பற்றில்,ஹெரோயின் வைத்திருந்தோர் கட்டுக் காவலில்

 


#SMM. IRSAATH.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெரோயினுடன்   நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிசாரின் கட்டுக்காவலில் வைத்து 3 நாட்கள்  வரை விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதிமன்றின் நீதிபதி கௌரவ ஹம்சா இன்று அனுமதியளித்துள்ளார்.


இன்றைய தினம் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும்  அக்கரைப்பற்று நீதிமன்றில், ஆஜர்படுத்தி, அக்கரைப்பற்று  பொலிஸ் காப்பு, கட்டுக் காவலில் (D.O) வைத்து விசாரிக்க அக்கரைப்பறறு பொலிசார் கௌரவ நீதிமன்ற அனுமதியைக் கோரிய வேளையில் அக்கரைப்பற்று நீதவான் கௌரவ ஹம்சா இன்று அனுமதியளித்துள்ளார்.

(முந்தைய செய்தி)

அக்கரைப்பற்று, பழைய சினிமா வீதியில், 2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


நேற்று (17) மாலை 6.55 மணியளவில் இக்கைது இடம்பெற்றுள்ளது.


இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், சந்தேகநபருக்கு ஹெரோயினை விற்ற பிரதான சந்தேகநபர், அக்கரைப்பற்று நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிததனர்.


குறித்த சந்தேகநபரிடமிருந்து 120 கிராம் ஹெரோயின், ரூ. 54,000 பணம், சிறிய டிஜிற்றல் தராசு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.


சந்தேகநபர்கள் இருவரும் 30 வயதுடைய, அக்கரைப்பற்றை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்றையதினம் (18) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.Advertisement