நாட்டு மக்களின் உரிமைகளை ஒரு நபரிடம் ஒப்படைப்பது அச்சுறுத்தலானது


 நாட்டின் 21 மில்லியன் மக்களின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் ஒப்படைப்பது அச்சுறுத்தலானது என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் 21 மில்லியன் பிரஜைகளின் உரிமைகளை ஒரு நபரிடம் மாத்திரம் பெற்றுக்கொடுப்பது சாதாரண தன்மை உடையது இல்லை. கோட்டாபய ராஜபக்ஸ தவறானவர், அவர் கொண்டுவரும் திட்டங்கள் முறையற்றது என்று நாங்கள் கூறவில்லை.

இந்த அதிகாரங்களை எதிர்காலத்தில் ஒரு தவறானவரிடம் கிடைக்குமாக இருந்தால், அது பாரிய பாதிப்பை ஏற்பட்டுத்தும். அந்தளவு பாரிய பிரச்சினைக்கு உரிய அதிகாரங்கள் இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்காக 8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இவ்வாறு பாரிய செலவில் உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கும் போது அதனை ஒரு வருடத்தில் அவர் கலைப்பது எந்த அளவிற்கு பொருத்தமானது.” என்றுள்ளார்.Advertisement