போக்குவரத்து பாதிப்பு




 


கொழும்பு விஜயராம மாவத்தையில் மரம் முறிந்து வீழ்ந்து கிடப்பதைப் பார்க்கலாம்.

தொடர்ச்சியாக இன்று (09) காலை பெய்து வந்த மழை காரணமாக கொழும்பிலுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு விஜயராம மாவத்தை

கொட்டாஞ்சேனை ஜேதவன விகாரைக்கு முன்பாகவுள்ள ஆமர் வீதி, பாபர் வீதி, இங்குரங்கடை சந்தி, கொழும்பு 8 தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகிலுள்ள காமினி சுற்றுவட்டம், தும்முல்லை சந்தி, ஹெவலொக் வீதி, பண்டாரநாயக்க மாவத்தை ஆகியன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அடை மழை பெய்யும் வேளையில், வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும், பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.