திருக்கோவில் கல்வி வலயத்தில் 5 பரீட்சை நிலையங்கள்

 


(வி.சுகிர்தகுமார்) 


  க.பொ.த.உயர்தர பரீட்சைகள் இன்று காலை முதல் 8.30 மணிமுதல் நாடளாவிய ரீதியில் 2684 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகின.
 
அம்பாரை மாவட்டத்திலும் பல்வேறு பரீட்சை நிலையங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை பேணி பரீட்சை இடம்பெறுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள இச்சந்தர்ப்பத்தில் பரீட்சை நிலையங்கள் யாவும் சுகாதார பிரிவினரால் தொற்று நீக்கம் செய்யப்பட்டிருந்தன.

திருக்கோவில் கல்வி வலயத்தில் 5 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்திற்குள் நுழைபவர்கள் யாவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கெரரோனா பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

 இதேநேரம் பரீட்சையில் தோற்றுவதற்காக இன்று காலை  ஆர்வத்துடன் பெற்றோர்களுடன் மாணவர்கள் காத்திருந்ததை காண முடிந்தது.


Advertisement