வாழைச்சேனையில், சிறுவனைதுஷ்பிரயோகத்தவருக்கு கடூழிய சிறை

 


2012 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் 6 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


குறித்த நபருக்கு எதிராக பாரிய பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

குறித்த வழக்கின் தீர்ப்பு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லாவினால் இன்று அறிவிக்கப்பட்டது.


பாரிய பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டிற்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஆட்கடத்தல் குற்றச்சாட்டிற்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், தண்டப்பணமாக ஆறாயிரம் ரூபாவும் செலுத்தத் தவறும் பட்சத்தில் 4 மாத கடூழிய சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 இலட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


வழக்கு தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானாAdvertisement