அக்கரைப்பற்று தனியார் காணியில் தேடுதல் வேட்டை


அக்கரைப்பற்று பொலிசாருக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், தனியார் காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகக் கருதப்படும் பொருட்கள் பற்றிய தேடல் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நேற்யை தினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் பொலிசார் இதற்கான அனுமதியைக் கோரியிருந்தனர். இதற்குரிய அனுமதியானது அக்கரைப்பற்று நீதிமன்றினால் வழங்கப்பட்டது. 


இன்றைய தினம் அக்கரைப்பற்று கடற்கரையை அண்மித்த தனியார் காணியில் கனரக இயந்திரம் கொண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மர்மப் பொருட்கள் தொடர்பில் இத்தகைய   தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.Advertisement