அக்கரைப்பற்று விவேகானந்தா வித்தியாலய மாணவி தேவானந்த கிருத்திகா 187புள்ளிகளைப் பெற்று வலயத்தில் முதலிடம்


வி.சுகிர்தகுமார்


 வெளியான ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம்  திருக்கோவில் கல்வி வலயத்தில் 116 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன் 88.88 வீதமான மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று வலயத்தின் சித்தி பெறும் வீதத்தினை அதிகரித்துள்ளனர்.


ஆலையடிவேம்பு கோட்டத்தில் 76மாணவர்களும், திருக்கோவில் கோட்டத்தில் 33 மாணவர்களும், பொத்துவில் கோட்டத்தில் 7 மாணவர்களுமே இவ்வாறு வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று வலயத்திற்கும் பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

 இதடிப்படையில் 187புள்ளிகளைப் பெற்ற அக்கரைப்பற்று விவேகானந்தா  வித்தியாலய மாணவி தேவானந்த கிருத்திகா வலய மட்டத்தில் முதலிடத்தையும்; பிடித்தார்.
 
இதேநேரம் அக்கரைப்பற்று அன்னை சாராதா வித்தியாலத்திலிருந்து 23 மாணவர்கள் சித்தியடைந்து வலய மட்டத்தில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலை எனும் பெருமையினையும் தனதாக்கி கொண்டது.

2019 ஆம் ஆண்டு  77.12 வீதமாக இருந்த சித்தி பெற்ற வீதத்தினை கொரோனா அச்சுறுத்தல் நிலவிய இச்சூழலிலும 88.88 வீதமாக உயர்த்தி சிறந்த பெறுபேற்றை பெற்றுக்கொண்ட மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்களை வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட கல்வி சமூகத்தினர் பெற்றோர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்கள்  தெரிவித்து வருகின்றனர்.