குடும்பத்தார் மட்டும் கொண்டாட்டம்


 (க.கிஷாந்தன்)

இந்துகளின் பண்டிகையான தீபாவளி பண்டிகை இன்று (14.11.2020) நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. எப்பொழுதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையானது இந்தமுறை கொரோனா நோய் பரவல் அதிகரித்துவருவதன் காரணமாக வீடுகளில் தனி மனித இடைவெளி கடைபிடித்து குடும்பத்தார் மட்டும் ஒன்று கூடி கொண்டாடினர்.

மலையகத்தில் பல இடங்களில் வழக்கமாக பண்டிகை உற்சாகத்துடன் குறிப்பாக, வெகு விமர்சையாக ஒன்று கூடி பண்டிகை கொண்டாடப்படும்.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக எளிய முறையில் இந்து மக்கள் தங்களது பண்டிகையை புத்தாடைகள் அணிந்து சமய வழிபாடுகளில் ஈடுப்பட்டு, உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துகளை தெரிவித்து, வீடுகளில் சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்துகள் தங்களது வீடுகளில் குடும்பம், குடும்பமாக பண்டிகையை கொண்டாடி மகிழந்தனர்.Advertisement