நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 72 பேர் நாட்டிற்கு வருகை!


 மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 72 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து மூவர் உட்பட கட்டாரில் இருந்து 45 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 24 பேர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

- Advertisement 

இந்த நிலையில் குறித்த அனைவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Advertisement