மாவீரர் தின நிகழ்வுக்கு தடை


எதிர்வரும் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் வவுனியா மற்றும் மன்னார் நீதிமன்றங்கள், இரண்டு தடையுத்தரவுகளை பிறப்பித்துள்ளன.

வவுனியா மற்றும் மன்னார் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மன்னார் நீதிமன்றத்தில் 5 பேருக்கும், வவுனியா நீதிமன்றத்தினால் 8 பேருக்கும் எதிராக அமுலாகும் வகையில் இந்த தடையுத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடையுத்தரவு தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய ஆவணங்கள், பிரதிவாதிகளிடம் கையளிக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.Advertisement