தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது



 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால், குருநாகல் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


நோயாளருடன் பழகிய ஏனையவர்களுக்கு PCR சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டார்.


குருநாகல் தபால் பிரிவிலுள்ள தபாலகமொன்றில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


இதன் காரணமாக குருநாகல் பிரதி தபால் மா அதிபர் அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.