பலத்த மழை


 


மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (31) 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


வடக்கு, கிழக்கு, வட மத்திய, மத்திய, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 50 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடும்.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


இதேவேளை புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 55 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.