2021 இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!www.ceylon24.com #சிலோன்24 வாசகர்கள், விளம்பரதாரர்கள், முகவர்கள், கடைக்காரர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற நினைப்புடன் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது இயல்பு. புத்தாண்டையும் அப்படி வரவேற்பது பொருத்தமாக இருக்கும். எந்தப் புத்தாண்டையும்விட 2021 ஏராளமான எதிர்பார்ப்புகளைச் சுமந்திருக்கிறது. 2020 நமக்குத் தந்த அனுபவங்களே இதற்குக் காரணம்.

‘அனுபவங்களே சிறந்த ஆசிரியர்’ என்பார்கள். கொரோனாக் காலம் பல நல்ல பாடங்களை நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அவற்றை இனிவரும் ஆண்டுகளிலும் பின்பற்றுவோம். அனைவரின் வாழ்விலும் இனிய மாற்றங்கள் ஏற்படும், தொழில் வளர்ச்சி முன்பைப்போல் அதிகரிக்கும், நம் பொருளாதார நிலை உயரும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைப்போம்.


#CEYLON24

மேலாண்மை இயக்குனர்

இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்

#