தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள்

 


வி.சுகிர்தகுமார் 0777113659  


  அம்பாரை மாவட்டத்தில் ஆலயங்கள் வீடுகள் மற்றும் சிறுவர் இல்லங்களிலும் உழைக்கும் மக்களால் இயற்கை தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தின கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

கொட்டும் அடைமழை மற்றும் வெள்ள நிலைமைக்கு மத்தியிலும் பெண்பிள்ளைகள் வீடுகளிலும் வீதிகளிலும் அழகிய கோலமிட்டு தைமகளை வரவேற்றதுடன் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தமிழ் மக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி ஈடுபட்டு வருகின்றனர்.

 தைபிறந்தால் வழிபிறக்கும் எனும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடப்படும் இத்திருநாள் கொண்டாட்டம்  அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்திலும் இடம்பெற்றது.

பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி பொங்கல் இல்ல தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபி;ள்ளையின் வழிகாட்டலில் சிறுவர்கள் பொங்கிவரும் பானையில் அரிசி இட்டு மகிழ்ந்ததுடன் பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

இதேநேரம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் தலைவர் க.கிருஸ்ணமூர்த்தி தலைமையில் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் வகையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இலி.கு.பழனிவேல்குருக்கள் பூஜை விபாடுகளை நடாத்தி வைத்ததுடன் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Advertisement