கல்வி நடவடிக்கைகள் இன்று

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


  சுமார் 45 நாட்களின்  மாதங்களின் பின்னர் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டதுடன் அதிகளவான மாணவர்கள் இன்று (11)  பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர்.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி பாடசாலைகள் யாவும் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்ட நிலையில்  இன்று முதல் சிரேஸ்ட மற்றும் கனிஸ்ட பிரிவு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக இன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று பெருநாவலர் பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் சமூகமளித்ததை காண முடிந்தது.
பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் மாணவர்கள் யாவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதை அவதானிக்க முடிந்தது.
மாணவர்கள் யாவரும் முகக்கவசம் அணிந்திந்ததுடன் கைகளுவும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.
இதேநேரம் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும்; பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
இந்நிலையில் பாடசாலையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை எடுத்ததுடன் மாணவர்களுக்கான பாதுகாப்பதற்கான சிறப்பான சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இன்றைய நாள் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்த நிலையில் கற்றல் நடவடிக்கை ஆரம்பித்தல் தொடர்பிலும் அதிபர் எஸ்.கனகரெத்தினம் தலைமையில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Advertisement