காத்தான்குடியில். அரச நிவாரணம்


 


காத்தான்குடியில் நேன்று இரவிலிருந்து அரச நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்...

காத்தான்குடி பிரதேச செயலாளர்

 எம் .ஜே பஸ்லின்


காத்தான்குடிக்கு நிவாரணத் தொகையாக அரசாங்கத்திடம் இருந்து ஒதுக்கப்பட்ட 67.97மில்லியன் ரூபாய் கொண்டு

13500 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 5000ரூபா பெறுமதியான  நிவாரணம் வழங்கும் பணிகள் நேற்று இரவு ஆரம்பமாகியது.


காத்தான்குடி பிரதேச செயலக பிரிவில் 15273 குடும்பங்கள் உள்ள போதிலும்  அரச தொழில் மற்றும் அரச ஓய்வூதியம், வருமானம்  பெறுபவர்கள் கழித்து 13674 குடும்பங்களுக்கு இவ்  நிவாரணம் பகிர்ந்தளிக்கப்படும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதய ஸ்ரீதர் தெரிவித்தார்.


நேற்று இரவு ஆரம்பமான நிவாரண வேலைத்திட்டமானது பிரதேச செயலக ஊழியர்கள் இராணுவத்தினரின் உதவியோடு ஒவ்வொரு வீடுவீடாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.


ஒவ்வொரு குடும்பங்களுக்கும் அரசாங்கம் ரூ10000/- நிவாரணத் தொகையாக ஒதுக்கப்பட்டுள்ளது இதில் 

முதற்கட்டமாக ரூ5000/- பெறுமதியான நிவாரணப் பொருட்கள் நேற்று இரவு தொடக்கம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.