பிரார்த்திக்கும் வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும்


 


சுகிர்தகுமார் 0777113659  


  கொரோனா தொற்றில் இருந்து இலங்கை திருநாடு மீளவேண்டியும் அதனூடாக அரசாங்கமும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திக்கும் வழிபாடுகளும் திருவாசகமுற்றோதலும் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று(10) காலை முதல் ஆரம்பாகி நடைபெற்றன.
  கடந்த சில நாட்களாக நாட்டிலும் அம்பாரை மாவட்;டத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் மக்கள் பல்வேறு பொருளாதார சிக்கல்களையும் எதிர்நோக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
இந்நிலையிலிருந்து நாடும் மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஆலயங்கள் தோறும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுவருவதுடன் மார்கழி மாதத்தில் ஆலயத்தில் பாடப்படும் திருவாசகமுற்றோதலும் நடைபெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரன் ஆலயத்தில்; தலைவர் ம.பாலசுந்தரம் தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ந.குமுதேஸ்வர சர்மா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வழிபாடுகளிலும்; திருவாசகமுற்றோதலிலும் ஆ.சசீந்திரன் தலைமையிலான ஓதுவார்கள் பலர் கலந்து கொண்டு 51 பதிகங்களை கொண்ட சிவபுராணம் 19 பாடல் உள்ளடங்கலாக திருவாசகத்தில் உள்ள 669 பாடல்களையும்; பாடினர்.
திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' எனும் பக்தி சிறப்பும் 'திருவாசகம் ஒருகால்  ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்' என சிறப்பிக்கப்பட்டதுமான மாணிக்கவாசக சுவாமிகளினால் அருளப்பட்ட திருவாசகத்தேன் ஆலயங்களில்; ஓதல் சிறப்பானதாகும்.
அந்தவகையில் நடராஜப்பெருமானின் துணை கொண்டு நாட்டின் சாந்தி சமாதானம் சகவாழ்வு வேண்டியும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டி பிரார்த்திக்கும்  திருவாசகமுற்றோதல் நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.