முள்ளிவாய்க்கால் நினைவுதூபியை அமைக்க அனுமதி

 


யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபியை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாணவர்கள் உடனடியாக குறித்த இடத்தில் அடிக்கல் நாட்டியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக உப வேந்தரினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.