அமெரிக்கா பயணமாகின்றார்

 ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் அமெரிக்கா பயணமாகின்றார்.
ஐக்கிய அமெரிக்க ராஜ்ஜியத்தின் Fulbright புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்க அரச திணைக்களத்தின் அனுசரனையுடன் நியூயோர்க்கிலுள்ள உலகிலுள்ள தலை சிறந்த பல்கலைக்கழகமான கோர்ணல் (Cornell) பல்கலைக்கழகத்தில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான ஒரு வருட கால உயர் கற்கை நெறியினை மேற்கொள்வதற்காகவே இவர் பயணமாகின்றார்.
எதிர்வரும் 03ம் திகதி இக் கற்கை நெறிக்காக இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டு பயணமாகும் ஒரே ஒரு இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட செயலகத்தில் இவருடைய வெற்றிடத்தை நிவர்த்தி செய்ய பதில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கடமைக்காக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றும் திரு வீ.ஜெகதீசன் அவர்களை அம்பாறை மாவட்ட செயலாளர் திரு டீ.எம்.எல் பண்டாரநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய பயணம் பாதுகாப்பானதும் சிறப்பானதுமாக அமைய பிராத்திக்கின்றேன்.