முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மீண்டும் அரசாங்கம் அமைத்துத்தர வேண்டும்

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைத்துத்தர வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக கல்முனை மாநாகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.

 
எதிர்வரும்  திங்கட்கிழமை (11) வட கிழக்கு  பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் இன்று(10) கல்முனை ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட சம்பவத்தை ஒன்றிணைந்து வெளிப்படுத்தம் வகையில் வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் கதவடைப்புப் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் அழைக்கின்றேன்.

குறித்த போராட்டத்தில் முஸ்லிம் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு தாயகம் தழுவிய ரீதியில் வர்த்தக செயற்பாடுகளை நிறுத்தி   போக்குவரத்து சேவைகள் உள்ளிட்டவற்றை பகிஷ்கரித்தும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

நேற்று கருத்தால்  அனுஸ்டிக்குமாறு கோரி வடக்கில்  ஏழு கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களும் இணைந்து குறித்த அழைப்பினை நான் நினைவூட்டி தற்போது அழைப்பாக   விடுத்திருக்கின்றேன்.

இந்த விடயத்தில் அழிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைத்துத்தர வேண்டும்.இதற்கு பல தரப்பினரும் உதவ வேண்டும் என தெரிவித்தார்.