முதல் நாள்



 பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உறுதியுரையும், சத்தியப் பிரமாண நிகழ்வு  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தலைமையில்  சர்வமத பிராத்தனையுடன் மாவட்ட செயலகத்தில்  இன்று(1) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர் நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூர்ந்து  இரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும் ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய் நாட்டினுள் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கை முன்நிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற, பண்பாடுகளைக்கொண்ட ஆரோக்கியமான சமூகத்தை கட்யெழுப்புவதற்காக  சத்தியபிரமானமும் உறுதியுரையும் வழங்கப்பட்டது.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் பொது மக்களின் தேவைகளுக்காக கடமை ஆற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதோடு வினைத்திறனுடனும்,உறுதியான எண்ணத்துடன் நேர்மையாக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் புதிய ஆண்டில் எம்மை தயார்படுத்திக்கொள்ள வேணடும் என  தனது  உரையில் குறிப்பிட்டார்.

இதில்   மேலதிக அரசாங்க அதிபர்களான  அப்துல் லதீப்,  வீ.ஜெகதீசன்,   உட்பட  மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.