ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில்


 


சுகிர்தகுமார் 0777113659 
அரச பொதுநிருவாக சுற்றுநிருபங்களின் பிரகாரம் வருடத்தின் முதல் கடமை நாள் தினத்தன்று அரச உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(01) காலை நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 200 இற்கும் மேற்பட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலக ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் நிருவாக உத்தியோகத்தர் க.சோபிதா தலைமையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அலுவலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வி.பபாகரனினால் தேசிய கொடியேற்றப்பட்டது.
 பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தேசிய கொடிக்கான மரியாதையும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதன் பின்னர் உறுதி மொழி வாசிக்கப்பட்டு சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
அரச உத்தியோகத்தர்கள் என்றும் விசுவாசத்ததுடன் நாட்டின் இறைமையை பாதுகாத்து அரச கொள்கைகளுக்கு அமைய மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குகின்றவர்களாக கடமையாற்ற வேண்டும் எனும் கருத்து பிரதேச செயலாளரால் இங்கு முன்வைக்கப்பட்;டது.
இதன் பின்னர் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் உத்தியோகத்தர்களுக்கு இனிப்பு பண்டம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.