தன்நிலை விளக்கம் கொடுத்துள்ளது #WhatsApp


வாட்சாப் செயலி தனது சேவையை தொடர கட்டாயமாக்கியிருக்கும் சமீபத்திய

தனியுரிமை கொள்கை ஏற்பு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனால் தனி கணக்கு வைத்திருப்பவர்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 4ஆம் தேதி புதிய தனியுரிமை கொள்கைகளை அறிமுகப்படுத்தியது வாட்சாப் செயலி. இந்த புதிய கொள்கைகள் வரும் பிப்ரவரி 8ஆம் தேதிக்குள் பயனரால் ஏற்கப்படாவிட்டால் அதன் பிறகு அவர்களின் வாட்சாப் செயலி கணக்கு நீக்கப்பட்டு விடும் என வாட்சாப் எச்சரித்துள்ளது.

இந்த செய்தியை கேள்விப்பட்டு பலரும் பல்வேறு மாற்று செயலிகளைத் தேடத் தொடங்கிவிட்டார்கள்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் ஈலான் மஸ்க், சிக்னல் செயலியைப் பயன்படுத்தலாம் என சமீபத்தில் கூறியது நினைகூரத்தக்கது.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சை மற்றும் விவாதத்தை தோற்றுவித்த நிலையில், தற்போது வாட்சாப் நிறுவனமே அதன் புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறது.

வாட்சாப்பில் தனி நபர் குறுந்தகவல்கள், அழைப்புகள், கால் லாக்குகள், இருப்பிடம், தொடர்புகள் என எல்லாம் பத்திரமாக இருக்கும் என அந்நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

குறுந்தகவல்கள் மற்றும் அழைப்புகள்: வாட்சாப் நிறுவனத்தாலோ ஃபேஸ்புக் நிறுவனத்தாலோ, உங்களின் தனி நபர் குறுஞ் செய்திகளையோ அழைப்புகளையோ பார்க்கவோ கேட்கவோ முடியாது. நீங்கள் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு இடையில் மட்டுமே இருக்கும். இதற்கு முழுமையாக என்க்ரிஃப்ட் செய்வது தான் காரணம். இந்த வசதியை நாங்கள் எப்போதும் பலவீனப்படுத்தமாட்டோம் என குறிப்பிட்டிருக்கிறது வாட்சாப்.

கால் லாக்நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள், யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறீர்கள் என்கிற லாக் விவரங்களை நாங்கள் சேமித்து வைத்துக் கொள்வதில்லை. 200 கோடி பயனாளர்களின் லாக் விவரங்களை சேமித்து வைப்பது என்பது தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியவை என்கிறது வாட்சாப்
Advertisement