தன்னியக்க வங்கி யான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வு

 


வி.சுகிர்தகுமார் 0777113659 


 அம்பாரை மாவட்டத்தின் மூன்றாவது சமுர்த்தி தன்னியக்க வங்கி யான கல்முனை வடக்கு மேற்கு வங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வும் உத்தியோகத்தர் கௌரவிப்பும் மேல்தள கட்டட திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் முன்னிலையில் வங்கி முகாமையாளர் செ.தவசீலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்வில் நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் பி.ராஜகுலேந்திரன் நிதி உதவியாளர் கே.சயானந்தன் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.அமலதாசன்  மாவட்ட தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தர் ரி.தெய்வேந்திரன் உள்ளிட்ட சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் கணிணி நிகழ்நிலை நடவடிக்கை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் உள்ளிட்டவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் பின்னராக வங்கியின் மேள்தளம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

நிறைவாக வங்கி கணிணிமயப்படுத்தலுக்கு உதவிய உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் வங்கிச்சீருடை அறிமுகமும் இடம்பெற்றது.
டம்பெற்றது.