சம்மாந்துறையின் சிரேஷ்ட உலமா , அல்ஹாஜ் அப்துல் காதர் (மிஸ்பாஹி) மறைவு


 


ஜனாஸா அறிவித்தல்.

சம்மாந்துறையின் சிரேஷ்ட உலமா, தப்லீகுல் இஸ்லாம் அரபிக் கலாசாலையின் பிரதி அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் சம்மாந்துறை கிளையின் முன்னாள் தலைவருமான மௌலவி அல்ஹாஜ் அப்துல் காதர் (மிஸ்பாஹி) ஹஸ்ரத் அவர்கள் இன்று அதிகாலை வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.
அன்னார் முன்னால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வாக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினராவார். அத்தோடு சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். மேலும் இலங்கையில் உள்ள அரபுக் கல்லூரிகளுக்கு இறுதி வருட மாணவர்களுக்கான மெளலவிப் பரீட்சை போன்றவற்றிற்கு வினாத்தாள் தொகுக்கக் கூடிய ஒரு பிரபல கல்விமானாவார்.
."பிக்ஹ்" துறையில்(இஸ்லாமிய சட்டக்கலையில்)ஆழமான அறிவைக்கொண்ட மூத்த ஆலிமை நம் நாடு இழக்கிறது, பிக்ஹின் சிறந்த ஆசிரியரை அல்லாஹ் அன்னாரின் சன்மார்க்க பணியினைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்பதோடு அன்னாரின் பாவங்களை மன்னித்து கப்ரை சுவனப் பூங்காவாக ஆக்குவானாக! ஆமின்.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.