நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் போராட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் நிந்தவூர்  ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் சிற்றூழியர்கள் ஆகியோர் இணைந்து  இன்று (03) வைத்தியசாலையின் முற்றலில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து சுலோக அட்டைகளை ஏந்தி போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

கொவிட் -19 ஆட் கொல்லிக்கு முதலில் பலியாவது தாதியரா? ,கொவிட் உடனான போரில் முன்னரங்கில் நிற்போருக்கு போதியளவு கையுறைகள் முகக்கவசங்களை தங்குதடையின்றி வழங்குஇ தடுப்பூசி பராமரிப்பில் நோயாளியுடன் நெருங்கிப் பணியாற்றும் எமது குடும்பத்துக்கும் வழங்கு, நாம் நோயாளிகளுக்கான சேவையை தடையின்றி மேற்கொள்ள போக்குவரத்து வசதி செய்து கொடு, பொதுமக்களின் உயிராபத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பை கொடுக்க எமக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு, தடுப்பூசி ஏற்றாத சுகாதாரப் பணிக் குழுவினருக்கு உடனடியாக ஏற்று,சுமார் 5,000 தாதிய உத்தியோகத்தர்களுக்கு இதுவரை தடுப்பூசி ஏற்றப்படவில்லை-அதற்கான ஏற்பாடுகளை செய், தடுப்பூசி ஏற்றாத தாதியருக்கு உடனே தடுப்பூசியேற்ற ஒழுங்கு செய், ஆபத்தைப் பொருட்படுத்தாது சேவையாற்றும் சுகாதாரப் பணிக் குழுவினருக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடு, கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதிகளில் சேவையாற்றும் பணிக் குழுவினருக்கு உணவு விநியோகத்தை ஒழுங்கு செய், ஆபத்துக்கு முகங்கொடுக்கும் சுகாதாரப் பணிக் குழுவினரின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய், போன்ற வாசகங்கள் கொண்ட பதாதைகளையும் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

மேற்குறித்த எமது கோர்ககை யாவும் பரிசீலனை செய்ய வேண்டும் என அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் உப தலைவர் ரி.எம் நஸ்ருதீன் தெரிவித்தார்.

இதே வேளை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையிலும் குறித்த போராட்டமானது இடம்பெற்றிருந்தது.இதில்   வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள்  , சுகாதார ஊழியர்கள் பல அம்ச கோரிக்கைகளை முன்வைத்து  வைத்தியசாலைக்கு முன்பாக   போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது மேற்குறித்த வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட  ஸ்ரீலங்கா ஜனராஜ சுகாதார சேவை சங்கத்தை  சேர்ந்த எஸ்.ஏ உமிர் எமது கோரிக்கைகள் நியாயமானவை எனவே நிறைவேற்றி தர வேண்டும் என  தெரிவித்தார்.

தாதிய உத்தியோகத்தர்களுடன் இணைந்து சுகாதார துறையிலுள்ள இன்னும் 7  தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த  போராட்டத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.