இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம்


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)கொரோனாவினால் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று(3) கொரோனாவின் 3 அலை அம்பாறை மாவட்டத்தில் அச்சுறுத்தலாக உருவாகி உள்ள நிலையில் எழுமாறாக எடுக்கப்பட்ட அன்டீஜன் பரிசோதனையை தொடர்ந்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியிடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கேட்டு பெற்று கொள்ளுமாறு ஊடகவியலாளரை கேட்டிருந்தார்.

இருந்த போதிலும்   இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்முனை பிராந்தியத்தில் உள்ள  சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரிவு முடக்கப்பட்டுள்ளது .இப்பிரதேசத்தில் மூன்று நாட்களில் 47 நோயாளிகள் மற்றும் ஒருவர் இறந்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளது.