#SLEAS விண்ணப்பங்கள்


 

#Mohammed Nibras.

இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்டது ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 


பொது ஆளணி மற்றும் விசேட ஆளணி அடிப்படையில் 442 பேரை உள்ளீர்ப்பதற்காக இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 


விண்ணப்ப முடிவுத் திகதி 30.07.2021


பொது ஆளணி - 45

விசேட ஆளணி

சிங்களம் - 39 

தமிழ் - 21

ஆங்கிலம் - 24

கணிதம் 20

விஞ்ஞானம் 29

வியாபார விஞ்ஞானம் 04

தகவல் தொடர்பாடல் 21

உடற்கல்வி 34

கத்தோலிக்க கிறிஸ்தவ சமயம் 3

இந்து சமயம் - 5

மாணவர் உளவளத்துணையும் வழிகாட்டலும் 24

விசேட கல்வி 11

திட்டமிடல் 52

ஆரம்பக் கல்வி 29

வரலாறு 29

அழகியல் 24

பொறியியல் தொழிநுட்பவியல் 09

உயிர்முறைத் தொழிநுட்பவியல் 18

மொத்தம் 442


கல்வித் தகைமை

பொது ஆளணி


பல்கலைக்கழக மொன்றில் அல்லது தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டம் பெற்றிருத்தல், 


அல்லது 


கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழ் அல்லது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சான்றிதழ்


விசேட ஆளணி 


குறிப்பிட்ட பாடத்துடன் தொடர்பான பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகம்

பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனமாக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து

அல்லது தேசிய கல்வி நிறுவனத்தில் பட்டம்


அல்லது


குறிப்பிட்ட பாடம் தொடர்பில் ஆசிரிய பயிற்சி சான்றிதழ் அல்லது பாடத்துடன் தொடர்பாக தேசிய கல்வியியல் கல்லூரியின் கற்பித்தலில் தேசிய சான்றிதழ்


அல்லது


தொழிநுட்ப துறையாயின் அது சார்ந்த நிறுவனங்களில் என்விகியு 6 மட்ட சான்றிதழ் 


ஏனைய தகைமைகள் ஒவ் வொரு பாடங்களுக்கும் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 


தகைமை : அனுபவம்


பொது ஆளணி


பட்டம் பெற்ற பின் 5 வருட ஆசிரியர் சேவை


அல்லது


கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பயிற்சி ஆசிரியர் ஆயின் அதன் பின்னர் 7 வருட சேவை


அல்லது


கற்பித்தலில் தேசிய டிப்ளோமா, பயிற்சி ஆசிரியர் உடன் பட்டம் பெற்றிருப்பின் 5 வருட சேவை


அல்லது


இலங்கை அதிபர் சேவை அல்லது இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவை அல்லது இலங்ைக ஆசிரியர் கல்வியியலாளர் சேவையில் 5 வருட திருப்திகரமான சேவை.