நிந்தவூரில் இராணுவத்தினர் களமிறங்கவுள்ளனர்#நிந்தவூர் வாழ்மக்களிற்கு சுகாதார வைத்திய அதிகாரி விடுக்கும் வேண்டுகோள்.

தற்போது எமது பிரதேசத்தில் நிலவுகின்ற கொரோனா தொற்று அபாயத்தை கட்டுப்படுத்தும்முகமாக பிரயாண தடைசட்டதை பொருட்படுத்தாது வீதிகளில் நடமாடுகின்றவர்களை கண்கானிப்பதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர்  களம் இறங்கியுள்ளதனால் மக்கள் தொடர்ந்தும் அலட்சியமாக நடந்துகொள்வதை தவிர்த்து பொறுப்புடன் நடந்து இந்த அபாயகரமான கொறோனாதொற்றை கட்டுப்படுத்த ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நம்மையும் காத்து எமது அன்புக்குரியவர்களையும் காப்போம்.

டாக்டர் பறூசா நக்பர் 
சுகாதார வைத்திய அதிகாரி
நிந்தவூர்.