அட்டாளைச்சேனையில்.மர்ம மரணம் விளைவித்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்


#SM.IRSAATH,.

அக்கரைப்பற்றுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,அட்டாளைச்சேனையில்.கடந்த  3ந் திகதியன்நு வாகனத்தினால் ஒருவருக்கு மரணம் விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 22 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்ரைப்பற்று நீதிமன்ற பதில் நீதிபதி திருமதி ஆர்கிலா கட்டளை பிறப்பித்தார்.

குறித்த மரண மானது, மிகப் பெரிய பரபரப்பை அட்டாளைச் சேனையில் ஏற்படுத்தி இருந்தது.அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அட்டாளைச்சேனை கவ்விக் கல்லுாரிக்கு அருகில் வைத்து , இந்த மரணம் நிகழந்திருந்தது.  அக்கரைப்பற்று திசையில் இருந்து கல்முனைப் பக்கம் நோக்கிச் சென்ற, மின் கலத்தில் செலுத்தும் துவிச் சக்கர வண்டியில் சென்ற நபரின் மீது, அதே திசையில் பின்னால் செலுத்தி வந்த ரிப்பர் வாகனம் மோதியதால் காயம் ஏற்படுத்தியதால் மரணம் ஏற்படுத்திய காட்சிகள்   CCTV காணொளிகளில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 44 வயது நிரம்பிய மஜீட் மரணமானார்.

இதேவேளை, கடந்த ஒரு வார காலமாக, குறிப்பிட்ட மரணத்துடன் சம்மந்தப்பட்ட  சந்தேக நபர் தலைமறைவாகியிருந்தார்,  இன்றைய தினம் குறித்த மரணத்தால் பாதிப்புற்றவர்களின் சார்பிலும், சந்தேக நபர் சார்பிலும் இரண்டு நகர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறித்த மரணத்ர்டன் தொடர்பான சந்தேக நபரை  எதிர்வரும் 22 ந் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கைரைப்பற்று நீதிமன்று கட்டளையாக்கியது.