அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் ஒட்சிசன் சிலிண்டர்கள் வழங்கிவைப்பு

 


සිහාන්)



கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை மற்றும் திருகோணமலை  ,மட்டக்களப்பு  மாவட்டங்களிலுள்ள 20 கொவிட் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் கொவிட் தொற்றிற்குள்ளானவர்களின் நலன் கருதி அமெரிக்க யூத உலக சேவை (AMERICAN JEWISH WORLD SERVICE) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடனும் கிழக்கு மாகாண பங்காளர் அமைப்புக்களின் உதவிகளுடனும் 7.7 மில்லியன் பெறுமதி கொண்ட  ஒட்சிசனுடன் கூடிய சிலிண்டர்களையும்  றெகுலேற்றர்களையும் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அம்பாறை  மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை ,நிந்தவூர், திருக்கோவில் ,பொத்துவில், உள்ளிட்ட  4 வைத்தியசாலைகளுக்காக 25 ஒக்சிஜன் சிலின்டர்கள் உள்ளிட்ட ரெகுலேட்டர்களையும் இன்று (09) கல்முனை பிராந்திய  சுகாதார பணிமனை ஒன்றுகூடல் மண்டபத்தில் வைத்து அம்பாறை மாவட்ட  பெண்கள் வலையமைப்பினரால்   உத்தியோக பூர்வமாக  கிழக்கு மாகாண  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்    அதிதிகளாக  மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் ,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார்,   கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் ,கல்முனை  பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன்  ,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ் ,அம்பாறை  பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் தயாபரன்  கலைவாணி , வலையமைப்பின்  சட்ட உத்தியோகத்தர் சட்டத்தரணி தினுசா சன்ஜய் ,  உள்ளிட்ட வலயமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
 
இன்று உலகையோ ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொவிட்டின் 3வது அலைத் தாக்கமானது குறிப்பாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் கொவிட் தொற்றாளர்களுக்காக சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு இவ் ஒக்சிஜன் தேவையுள்ளதனை பிராந்திய சகாதார சேவைகள் பணிமனையின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க  அம்பாறை மாவட்ட   பெண்கள் வலையமைப்பினால்  இவ்  ஒக்சிஜன் சிலின்டர்கள் உள்ளிட்ட  ரெகுலேட்டஸ்களும்  வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.