ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு


 


வி.சுகிர்தகுமார் 0777113659  

  திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரூபஸ் குளத்தில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

மீன்குஞ்சு வளர்ப்பு ஊடாக காஞ்சிரங்குடா கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களின்  வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Pடநனபந வழ சுநளவழசந குழரனெயவழைn நிதி அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் கலந்து கொண்டு மீன்குஞ்சுகளை குளத்தில் விட்டார்.

நிகழ்வில்; உதவிப் பிரதேச செயலாளர் மு.சதிசேகரன், அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் இரா. விக்னேஸ்வரன், அக்கரைப்பற்று பகுதி இனைப்பாளர் இதயதினேஸ், திருக்கோவில் இணைப்பாளர் சேந்தன் மற்றும் மீன்பிடி அபிவிருத்தி உத்தியோகத்தர் அபராஜிதன், மீன் வளர்ப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ரவிக்குமார்; ரூபஸ் குள நன்னீர் மீன்பிடி மீனவ சங்க செயலாளர் தியாகராஜா, பொருளாளர், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

திலாப்பியா இனத்தை சேரந்த ரூபா ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபா பெறுமதியான சுமார் 50 ஆயிரம் மீன் குஞ்சிகள் குளத்தில் விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.