ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் உற்பத்தி செய்யப்படும் 7 வித பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அதன்பிரகாரம், பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றையே தடைசெய்ய பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Kayal


Post a Comment
Post a Comment