அக்கரைப்பற்றில் கொரொனா பரவலைத் தடுக்க புதிய நடவடிக்கைகள்


 


அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகார-ி பணிமணைக்குட்பட்ட பகுதியில் கொரொனா பரவலைத் தடுக்க, பல்வேறுபட்ட புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.

கொழும்பிலிருந்து பேருந்துகளில் வருபவர்களுக்கான பரிசோதனைகள்.

கடற்கரை உட்பட பொழுது போக்கு இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்த்தல்.

 உணவகங்கள் உட்பட ஏனைய கடைகளிலும் சுகாதார நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுவதை உறுதி செய்தல் போன்றனவாகும்


மேற்போந்த விடயங்கைள அமுல்படுத்த அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகார-ி தலைமையிலான குழுவும்,பொலிசாரும் இணைந்து செவ்வாயக்கிழமை 10.08.2021முதல் அமுல் படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

,