அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்கள் யாவும் வெறிச்சோடிக்காணப்பட்ட நிலையில்


 


வி.சுகிர்தகுமார் 0777113659 



  நாடளாவிய ரீதியில் நேற்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அம்பாரை மாவட்டத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்கள் யாவும் வெறிச்சோடிக்காணப்பட்ட நிலையில் பாமசி மற்றும் சத்தோச நிலையங்கள் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவை நிலையங்கள் மாத்திரம் திறந்துள்ளன.
அக்கரைப்பற்று மத்திய சந்தைப்பிரதேசத்திலும் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தினர் வீதிச்சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ள நிலையில் வெளியில் நடமாடுகின்றவர்களை பரிசோதனைக்குட்படுத்தி வருகின்றனர். உரிய காரணமின்றி நடமாடுகின்றவர்களை எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு அனுப்பியும் வருகின்றனர்.
இதேநேரம் பிரதேச செயலகம் ஊடாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவை வழங்கும் விடயங்கள் தொடர்பிலும் பிரதேச செயலக செயலாளர் வி.பபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளினால் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும் மக்கள் பொறுப்புடன் நடந்து கொண்டு தொற்றிலிருந்து மீண்டு வர ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.