நீர்வீழ்ச்சி அருகே இளம் ஜோடி ஆபாசம் : காணொளி தொடர்பில் சிறப்பு விசாரணை


 இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, பெலிஹுல் ஓயா பகுதியில் அமைந்துள்ள பஹன் துடாவ நீர் வீழ்ச்சி அருகே, இளம் ஜோடி ஒன்று ஆபாச காணொளியை தயார் செய்து இணையத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளில் குறித்த ஆபாச காணொளியை பெண் ஒருவரே இணையத்தில் பதிவேற்றியுள்ளமை தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Kayal