உலக சதுப்பு நில தினமும் , இலங்கையின் சதுப்பு நிலங்களும்ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக சதுப்பு நில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈர நிலச் சூழல் தொகுதியானது உயிர்ப்பல்வகைமையைப் பொறுத்தவகையில் முக்கியமானதாகக் கொள்ளப்படுகிறது.


மேலும் சுற்றாடல் சமநிலையைப் பேணுவதற்கும் உகந்ததாக ஈர நிலத் தொகுதி காணப்படுகின்றது. 

ஆறுகள், தாழ்நிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், கழிமுக, கடலோர குடியிருப்பு பகுதிகள், சதுப்புநிலக்காடுகள், பவளத் திட்டுகள், மீன் குளங்கள், நெற்பயிர் நிலங்கள், நீர்த் தேக்கங்கள் என்பவை​யெல்லாம் ஈரநிலப்பட்டியலில் உள்ளடங்குகின்றது.


உலகம் முழுக்க மனிதனின் தொடர் செயல்களால் இவை மிகப்பெரிய அழிவை சந்திக்கின்றன. சுற்றுலா தளங்களை உருவாக்குதல், ரியல் எஸ்டேட் தொழில்கள் ஆகியனவும் இத்தகைய நிலங்களை அழிக்கின்றன. பல்லுயிரி வளம், நிலத்தடி நீர் வளம், நீரை வடிகட்டி நன்னீர் ஆக்குதல், உணவுச்சங்கிலியின் உறுதியான பிணைப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் இவற்றின் அழிவு மேற்சொன்ன எல்லாவற்றையும் காணாமல் செய்கிறது.


சுனாமி நம் நாட்டை தாக்கியபொழுது சதுப்பு நிலக் காடுகள் அதன் தாக்கத்தை பெருமளவில் குறைத்தது குறிப்பிடத்தக்கது. வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுப்பதும் இடம் சார் காலநிலை, நுண் காலநிலை என ஒழுங்காக மழை, வெயில் ஆகியன அதனதன் காலங்களில் உண்டாவதையும் உறுதி செய்கிற வேலையையும் இவைதான் செய்து வந்திருக்கின்றன. உலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின.


பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன. ஈரநிலக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.


பிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன. எவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.


இந்நிலமானது சூழல் கலாசார அடிப்படையிலும் பொருளாதாரத் துறையிலும் முக்கியத்துவமாகின்றது. இந்நிலத்தோடு தொடர்புடைய வரலாறு மனித நாகரிகத்தின் ஆரம்பத்தோடு பிணைந்துள்ளதெனலாம். இந்து நதிப் பள்ளத்தாக்கின் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகமும் இலங்கையின் மல்வத்து ஓயாவையண்டி உருவான முதற் குடியேற்றமும் ஈர நிலத்தை மையமாகக் கொண்டு உருவானவையாகும்.


ஈர நிலங்களில் நத்தைகள், சேற்று நண்டு, கடல் நண்டு, கடலேரி நண்டு, ஒற்றைக் கவ்விwetland wildlife நண்டு, சிங்கி இறால், பால் இறால், கண்டற்சிப்பி, ரெலஸ் கோபியம் சிப்பி, லிற்றோரிச் சிப்பி, கண்டல் நீலச் சிப்பி, ஊரி, நீர்ப்பல்லி. கண்டற்கொக்கு, வெண்கொக்கு, கடற்புள், ஆக்காட்டிக் கருவி, மீனினங்கள், பாலூட்டிகள், ஈரூடக வாழிகள், ஊர்வன போன்ற உயிரினங்களும், பறவைகளும் சஞ்சாரம் செய்கின்றன.


அவ்வகையில் கொழும்பு நகரின் வரலாற்றை நோக்கும் போது சதுப்பு நிலங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக காணப்படுகிறது. சதுப்பு நிலங்களைச் சூழ அபிவிருத்தியடைந்துள்ள இந்நகரானது இன்றும் அச்சதுப்பு நிலங்களைச் சார்ந்ததாகவே உள்ளது. அதேநேரம் அச்சதுப்பு நிலங்கள் தரங் குறைந்த நிலையிலும் அழியும் தருவாயிலும் உள்ளன. பல்வேறு சட்ட திட்டங்கள், அரச நிறுவனங்களின் பங்களிப்பு இருந்த போதிலும் இன்று அதன் தரக்குறைவுக்கும் அழிவுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கொழும்பு மாநகர பிரதேசத்தில் இவ்வாறு சதுப்புநிலக்காடுகள் அழிக்கப்பட்டும் தரம் குறைந்தும் வருவதனால் வனவிலங்குகளும் பல்லுயிர்களும் அழிந்து போகும் எதிர்நோக்கியிருப்பது மட்டுமல்லாது நகரின் சமூக பொருளாதாரம் நம்பியுள்ள இயற்கை மூலதனமும் பாதிப்படைகிறது. 


கடந்த 1980 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இருந்த இந்நகரின் சதுப்பு நிலப்பிரதேங்களில் 60 வீதமானவை அழிந்துள்ளன. இவ்வழிவானது வருடத்துக்கு ஒரு வீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வாறாயிருப்பினும் இந்த இழப்பானது வெறுமனே ஒரு இழப்பு என்று கருத முடியாது. அதேவேளை, இழப்பும் மீள்நிரப்பலும் தவிர்க்க முடியாதாயிருக்கலாம்.


மாசடைதல், குப்பைகளை போடுதல் மற்றும் கழிவு நீர் கலத்தல், அத்துமீறி திட்டமிப்படாத குடியிருப்புக்களை அமைத்தல், கடல்நீர் ஊடுருவுதல், அந்நிய நுண்ணுயிர்கள் மற்றும் அதிகரிக்கும் குடியிருப்புக்கள், சதுப்பு நிலங்கள் பாதிப்படைய காரணமாயிருப்பதுடன் அதுவே மனித சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவதாகவும் அமைகிறது. இப்பாதிப்புக்களும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றம் தீவிரமடைய காரணமாயிருப்பது குறிப்பிடத்தக்கது.


 கொழுப்பு மாநகரானது 19 கிலேமீற்றர் சதுப்பு நிலக்காடுகளைக் சூழ்ந்த்தாக அமைந்துள்ளது. திறந்த நீர்நிலைகள், குளங்கள், ஓடைகள் என்பன காணப்படுகின்றன. சதுப்பு நிலக்காடுகள்,  அவற்றுக்கே உரிய மற்றும் அந்நிய உயிரினங்கள் ஆட்சி காணப்படுகிறது. மேலும் கைவிடப்பட்ட வயல்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் மருத்துவ தாவரங்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. கொழும்பு மாநகர சுற்றுப்புற சதுப்பு நிலங்களில் 85 வீதம் மழை நீரினால் பெறப்படும் நன்னீரின் ஆதிக்கமே காணப்படுகிறது. கொழும்பு நகரைச் சூழவுள்ள தரம் குறைந்த சதுப்பு நிலங்கள் உட்பட அனைத்தும் ஏதோவொரு வகையில் மனித நலனுக்கேற்ற வகையில் பயனுள்ளதாக அமைகிறது. இவற்றால் பெறப்படும் 90 வீதமான நலன்கள் கொழும்பு மாநகருக்கே கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் அதிக நீர்வீழ்ச்சியின் போது பெறப்படும் நீரை உள்வாங்கி வௌ்ளம் வராமல் தடுக்கிறது. வௌ்ளத்தடுப்பைத் தவிர மேலும் பல முக்கியமான பல நன்மைகள் சதுப்பு நிலத்தில் கிடைக்கின்றன. வயல் மற்றும் ஏனைய விவசாய நிலங்களினூடாக உணவு உற்பத்தி செய்தல், வடிகாலமைப்பு அல்லது வீட்டுப்பாவனைக்கான கிணறுகளுக்கு நன்னீரை வழங்கல், அழகிய மற்றும் மருத்துவ தாவரங்களை வளர்த்தல், உள்ளக காற்றின் வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பூச்சிகளை கட்டுப்படுத்தல், வீட்டுத்தோட்டங்களின் மகரந்த சேர்க்கைக்கு துணை புரிதல், உலக வெப்பநிலை சீர்ப்பாட்டுக்கான காபனை சேமித்தல் மற்றும் பிரித்தல் பணியை செவ்வனே செய்தல், பொழுதுபோக்கு மற்றும் கல்வி வாய்ப்புகளை வழங்குதல், சப்பிரதாயபூர்வமான நம்பிக்கைகள், ஆன்மீக மற்றும் கலாசார விடயங்களுக்கு பங்களிப்பு வழங்கல் என்பற்றுடன் கூடிய உல்லாசத்துறைசார் நன்மைகள் என்பன இவற்றுள் உள்ளடங்குகின்றன.


இச்சதுப்பு நிலங்களாவன பல்வேறு மனித செயற்பாடுகள் காரணமாக அதன் தரத்தை இழக்கிறது. இவ்வாறு சதுப்பு நிலங்கள் தரமிழப்பதால் அவற்றில் இருந்து கிடைக்கும் நன்மைகளும் படிப்படியாக குறைந்து வருகிறது.


கொழும்பு சதுப்புநில முகாமைத்துவ மூலோபாயத்தின் குறிக்கோள்களாவன:


கொழும்பு மாநகர எல்லைக்குள் மதிநுட்பத்துடன் கூடிய, நிலையான சதுப்புநில முகாமைத்துவ மூலோபாயம். மூலோபாய நோக்கங்கள் ஊடாக பயணிக்கும்  (cross-cutting) துணைச் செயற்பாடுகள் காணப்படுவதுடன் கீழே தரப்பட்டுள்ள அடையாளங்காணல், தவிர்த்தல், மீட்டல், ஈடுபடல் மற்றும் கட்டுப்படுத்தல் ஆகிய ஐந்து கருப்பொருட்ளினூடாக அக்குறிக்கோள்கள் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளன


மூலோபாய குறிக்கோள்


1:  அடையாளங்காணல்- சதுப்பு நிலங்களில் கண்டறிந்த, உய்த்தெடுக்கப்பட்ட பலன் மற்றும் மதிப்புகளை மதிநுட்பமான பயன்பாட்டு, செழிப்பான அபிவிருத்தி, மனித நலன் என்பவற்றுக்கு அடிப்படையாக காணப்படுகிறது. இவ்வனைத்து மதிப்புகளும் இனங்காணப்பட்டு தீர்மானங்கள் எடுக்கும்போது பயன்படுத்தவேண்டும்.


2: தவிர்த்தல்- சதுப்பு நிலங்கள்மென்மேலும் அழிவடையாமல், தரம் குறைவடையாமல் தவிர்த்தல் வேண்டும்.


3: மீட்டல்- தரம் குறைந்த, சதுப்பு நிலங்களை மீட்டு மீண்டும் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதனூடாக சுற்றுச்சூழல் செயற்பாட்டை சீர்படுத்தி சமூக,பொருளாதார மதிப்புக்களை அதிகரிக்கச் செய்தல்.4: ஈடுபடல்- மதிப்புக்களை அடையாளங்காணல் மற்றும் மதிநுட்ப செயற்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு பலவேறு பங்குதாரர்களுடன் இணைந்து பங்கேற்பு அணுகுமுறையினூடாக செயற்படல்.


5: கட்டுப்படுத்தல்- சட்டக்கருவிகள் மற்றும் முகாமைத்துவ நிறுவனங்கள் என்பன சதுப்பு நில முகமைத்துவ மூலோபாயத்திற்கு பொருந்துவதாக அமைய வேண்டும்.


wet ch7மண்ணில் காற்று குன்றும் போது அதற்கு ஈடு செய்யும் வண்ணம் தாவரங்களும் இந்த ஈர நிலங்களில் உள்ளன. உவர் நீர்ச்சதுப்பு நிலங்களில் கண்டல் தாவரங்களைக் காணலாம். சிறுகண்டல், நரிக் கண்டல், கிண்னை, தில்லை, கடல் நீர் முள்ளி, வெண்கண்டல். கண்டல். நீர்த் தேங்காய், சாமுந்திரி, திப்பரத்தை காரான் பன்னம், யானைக்கண்டல் என்பன குறிப்பிடத்தக்கன.


இவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது. இவ்வுடன்படிக்கையை சுமார் 168 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வுடன்படிக்கைப் பிரகாரம் 1957 ஆம் ஆண்டு முதல் பிரதியாண்டும் பெப்ரவரி இரண்டாம் நாள் உலக ஈரநிலத் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.


சதுப்புநில முகாமைத்துவ மூலோபாயமானது (Wetland Management Strategy - WMS) உலகளவில் பயன்படுத்தப்படும் அடிப்படை கொள்கைளை ஆதாரமாகக் கொண்டது. இவற்றில் சதுப்பு நிலங்களை மதிநுட்பத்துடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பதே பிரதானமானது. மக்களின் நலனை கேந்திரமாகக் கொண்டு பேணுவது என்பது சதுப்பு நிலங்களின் இயற்கை சூழலை பாதுகாத்து மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று எல்லைக்குள் முகாமைத்துவம் செய்வதாகும். மதிநுட்ப பயன்பாடு என்பது ரம்சார் உடன்படிக்கையின் மத்திய கொள்கையில் ஒன்றாகும்.


ஏனைய அடிப்படை கொள்கைகளாவன, நிலம், நீர்,நேரடி வளப்பாதுகாப்பு என்பன சாதாரண முறையில் பாதுகாக்கும் அதேநேரம், பல்துறைசார் செயற்பாடுகளை துறைகளினூடாக செயற்படுத்தவேண்டியதாக காணப்படுகிறது. மேலும் நகர மற்றும் நகரை அண்மித்த சதுப்பு நிலங்களுக்கான சிறந்த திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தை பின்பற்றுவது ஆகும்.


இதையடுத்து, ஆண்டுதோறும் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இத் தினம் 


முத்துராஜவல சதுப்புநிலத்தில், 209 வகையான விலங்கினங்களும், 194 வகையான மரங்களும், 40 வகையான மீன்களும், 31 வகையான பாலூட்டிகளும், 102 வகையான பறவைகளும், 48 வகையான வண்ணத்துப்பூச்சிகளும் உள்ளனஇலங்கையில் பல்லுயிர்களின் சரணாலயமாக விளங்கும், Muthurajawela கடற்கரைப் பகுதியிலுள்ள மிகப்பெரிய சதுப்புநிலம் பாதுகாக்கப்படுமாறு, அந்நாட்டின் சூழலியல் ஆர்வலர் ஒருவர் அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.


இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை ஒன்றின் இயக்குனரான Sajeewa Chamikara அவர்கள், இந்த சதுப்புநிலம் பற்றி யூக்கா செய்தியிடம் கூறுகையில், அரசு அதிகாரிகள், இந்த சதுப்புநிலத்தை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளனர் என்றும், 50 ஏக்கர் நிலப்பகுதி நிரப்பப்படும் பணி இடம்பெற்று வருகிறது என்றும் கூறினார்.


Muthurajawela சதுப்புநிலம், இலங்கையிலுள்ள 41 மிக முக்கிய சதுப்புநிலப்பகுதிகளில் ஒன்று எனவும், இந்தப் பகுதி சேதப்படுத்தப்படுவதால், நெகோம்போ நீர்த்தேக்கப் பகுதியில் முட்டையிடும் உயிரினங்களின் வாழ்வு உட்பட, அப்பகுதி மக்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும், Chamikara அவர்கள் கூறினார்.


Muthurajawela சதுப்புநிலம், உலக அளவில் முக்கியமான 41 சதுப்புநிலங்களில் ஒன்று என்று, 1996ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி, ஆசிய சதுப்புநிலப் பாதுகாப்பு அமைப்பால் அறிவிக்கப்பட்டது என்றும், Chamikara அவர்கள் தெரிவித்தார்


உவர் சதுப்பு நிலம் 

உவர் சதுப்பு நிலம் என்பது கடல் நீர் உட்புகக் கூடிய ஒரு நிலப்பரப்பில் உவர்த் தன்மை கொண்ட மணல் அல்லது சேற்று நிலத்தால் மூடப்பட்ட தாவரப் போர்வையினை தன்னகத்தே கொண்ட பகுதியாகும். சீரான காலநிலை நிலவும் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் வளர்ச்சியடை வதுடன் கழிமுகத்தை அண்டியும் காணப்படும்.


இலங்கையின் வடக்கு, வடமேல், வட கிழக்கு, தென் கீழ் பகுதிகளில் வரண்ட நிலப்பகுதி களில் இவ்வாறான பரந்த உவர் சதுப்பு நிலம் காணப்படும். தென் கரையோரத்தில் இவை பெரியளவு மணல் சூழ்ந்த பகுதியில் காணப்படுகிறது. இச் சதுப்பு நிலத்தில் செடிகள் குட்டையாக வளர்வதுடன் கண்டல் தாவரங்களுடன் இணைந்தும் காணப்படும். கரையோரத்தை அண்டிய நீருக்கு போசணையையும், பறவை இனங்களுக்கு சூழலில் இடமளிப்பதும் கரையோர உயிரினங்களுக்கு வாழ்வளிப்பதுடன் மீனின உற்பத்திகளில் பாரியளவில் பங்களிக்கின்றது.


 சதுப்புநில காடுகள் பெருமளவில்  கடலோர சுற்றுச்சூழல் பகுதியை உருவாக்குகின்றது. அவை காற்றிலிருந்து கார்பனை வடிகட்டுவதுடன், கரையோரத்தை பாதுகாக்கின்றன, பெரும்பாலான கடல்வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடங்களை வழங்குகின்றன, மேலும் கட்டுமானங்களுக்கான மூலப்பொருட்கள், உணவு, கைவினைப்பொருட்கள் மற்றும் மருந்துக்கான மூலப்பொருட்களை வழங்குகின்றன. அவை  இயற்கை அழகின் தளமாக, கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டுள்ள தளமாக காணப்படுவதுடன், மேலும் உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும் முக்கியமாக அமைகின்றது. 


இலங்கையின் கடற்கரை ஓரங்களில் இருபத்தி இரண்டு வகை சதுப்பு நில தாவர இனங்கள் செழித்து வளர்கின்றன, ஆனால் அவை கடந்த காலங்களில் இருந்து அழிவை சந்தித்துவருகின்றன. சதுப்புநிலப் பகுதிகளை மீட்டெடுப்பது மற்றும் விரிவாக்குவது இலங்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைவடைய செய்யவும் மற்றும் கடலோர சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு உதவவும் வழிவகுக்கின்றது. 


தங்களைச் சுற்றியுள்ள சமூகங்களுக்கு, சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்புகள் சதுப்புநில ஆப்பிள்களை அறுவடை செய்வதிலிருந்து சுற்றுச்சூழல் சுற்றுலாவில் முதலீடு செய்வது வரை பல பொருளாதார வாய்ப்புகளை வழங்குகின்றன. மாவட்டத்தின் சதுப்புநில மறுசீரமைப்பு , பாதுகாப்பான வாழ்வாதார மேம்பாடு மற்றும் பொருளாதார பல்வகைப்படுத்தலுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும், குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட  தளமான  டிகோவிட்ட(Dikowita) பகுதியில் கவனம் செலுத்தப்பட்டது