ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு கடமையைச் செய்ய விடாது கொலை அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்


 


அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளருக்கு கொலை செய்வதாக அச்சுறுத்தல் விடுத்து கடமைக்கு பங்கம் விளைவித்து சந்தேகநபரான அக்கரைப்பற்று செ பஸ்ரியன்  வீதியைச்  சேர்ந்த சந்தேக நபரை  எதிர்வரும் 10 ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று கெளரவ நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

கடந்த 9ந் தேதி அன்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதேச செயலாளருக்கு இவர் கடமையை செய்யவிடாது பங்கம் விளைவித்ததுடன், கொலை செய்வதாகவும் அச்சுறுத்தினார் என்பதாக அக்கரைப்பற்றுப் பொலிசார் இன்று  நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.