இன்சமாம் உடல் நிலை சீராக இருக்கின்றதுகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக். 1992-ம் ஆண்டு பாகிஸ்தான் உலக கோப்பையை வெல்ல இவரது அதிரடியான ஆட்டம் முக்கிய பங்கு வகித்தது.

இந்தநிலையில் 51 வயதான இன்சமாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவ மனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது இன்சமாம் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த பாகிஸ்தான் வீரர் இன்சமாம் ஆவார். அவர் 378 போட்டிகளில் 11,739 ரன் எடுத்துள்ளார். 10 சதமும், 83 அரை சதமும் அடித்துள்ளார்.

டெஸ்டில் அதிக ரன் எடுத்த 3-வது பாகிஸ்தான் வீரர் ஆவார். 120 டெஸ்டில் 8,830 ரன் எடுத்து உள்ளார். பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான கேப்டனில் ஒருவரான அவர் 2007-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பல்வேறு பொறுப்புகளையும் அவர் வகித்து வந்தார்.