கல்முனையில், கட்டாக்காலிகளால் தொல்லை !


 


கட்டாக்காலிகளால் தொல்லை !


நூருள் ஹுதா உமர்


கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் காட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து சம்பவங்களும் இடம்பெறும் அபாயம் நிலவிவருகிறது.  


இது தொடர்பில் கல்முனை மாநகர சபை முதல்வர், ஆணையாளர், உறுப்பினர்கள் கவனம் செலுத்தி இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.